யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பன்னி குட்டி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் பீஸ்ட், வலிமை, அயலான், வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார். அதன்படி பன்னி குட்டி, பொம்மை நாயகி போன்ற படங்களில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் அனுசரன் இயக்கியுள்ள பன்னி குட்டி படத்தில் கருணாகரன், சிங்கம் புலி, திண்டுக்கல் ஐ.லியோனி, டைகர் தங்கதுரை, KPY ராமர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
https://twitter.com/LycaProductions/status/1463885283942813704
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பன்னி குட்டி படத்தின் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக ரிலீஸ் உரிமத்தை 11:11 புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.