யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பூமர் அங்கிள் படத்தின் டிரைலர் வீடியோவானது வெளியாகி இருக்கிறது.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு, ஓவியா, ரோபோசங்கர், தங்கதுரை உட்பட பல பேர் நடித்துள்ள திரைப்படம் பூமர் அங்கிள். அறிமுக டிரைக்டர் சுவதீஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க காமெடியாக உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை அன்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரிக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு முதலில் காண்ட்ராக்டர் நேசமணி என்று தான் தலைப்பு வைத்து இருந்தனர். அதன்பின் பூமர் அங்கிள் என மாற்றியிருக்கின்றனர். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி இருக்கிறது.