யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் வீரப்பனின் கஜானா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகிபாபு. இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி இவர் நடிப்பில் உருவான மண்டேலா படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் யோகி பாபு வீரப்பனின் கஜானா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Happy to release the first look of #veerappaningajana Congrats to the #ProducerPRABADISHsamz wishing him a great success as a producer in the film industry. pic.twitter.com/SZkKHwvBVa
— Kalaippuli S Thanu (@theVcreations) August 14, 2021
இயக்குனர் யாஷ் எழுதி இயக்கும் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், ஜீவிதா, தேவா, ராஜேஷ், பூஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் போர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘வீரப்பனின் கஜானா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், தயாரிப்பாளர் தாணுவும் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.