இயக்குனர் கௌதம் மேனன் நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் . அந்த வகையில் யோகி பாபு நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மண்டேலா. நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீசான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thkyuo gautham menon sir pic.twitter.com/rgoYyfajMo
— Yogi Babu (@iYogiBabu) June 9, 2021
இந்நிலையில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் மண்டேலா படம் ஒரு சிறந்த காமெடி படம் என்றும், யோகி பாபுவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும், அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் கௌதம் மேனன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.