புதுச்சேரி கல்லூரி வளாகத்திற்குள் மாணவனின் புத்தகப்பையை திருடிக் கொண்டு சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளது. அங்கு 3வது மாடியில் உள்ள கட்டிடத்தில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வுக்காக புத்தகங்கள் அனைத்தும் நேற்று வகுப்பறையின் வெளியே வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு நாகரீகமாக உடை அணிந்த ஒருவர் அங்குமிங்கும் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென ஒரு பையை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அதில் ஒரு செல்போன் மற்றும் புத்தகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது இது பற்றி ஜிப்மர் நிர்வாகம் தரப்பில் கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.