விண்ணுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் ககன்யான். இத்திட்டத்தின் வெற்றிக்கான பணிகளில் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் ராக்கெட் விஞ்ஞானி பிரவீன் மவுரியாவும் ஒருவர். இவர் சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பதிவில்
பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கங்கன்யா திட்டம் குறித்து ரகசிய தகவல்களை கேட்டு துபாய் நாட்டைச் சேர்ந்த சிலர் என்னை தொடர்பு கொண்டனர்.
அதற்கு கோடி கணக்கில் பணம் தருவதாகவும் கூறினார்கள். இது குறித்து இஸ்ரோ தலைவருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ரகசிய தகவல்களை கூற ஒத்துழைக்காவிட்டால் கஞ்சா வழக்குப் பாயும் என மிரட்டியதாகவும் பகீர் புகார் கூறியுள்ளார். மிரட்டல்காரர்களுக்கும் கேரள போலீசுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ள மவுரியா, இதுகுறித்து பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.