Categories
உலக செய்திகள்

ரகசியமாக நடந்த திருமணம்…. போலீசாரின் அதிரடி… பின் நேர்ந்த சம்பவம்…!!

கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட திருமணத்திற்கு காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் சர்ரே கவுண்டியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது கிங்ஸ்வுட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் இருக்கும் விளைநிலத்தில் 30க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்துள்ளனர். மேலும் அந்த முகவரியில் இருந்த ஒருவரிடம் விசாரித்தபோது அவர்கள் அனைவரும் ஒரு விளம்பரத்திற்கான சூட்டிங் நடந்த வந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரம் கழித்த பின்பு அங்கிருந்து காரை எடுத்த ஒரு நபரிடம் விசாரித்தபோது அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருப்பதாக ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது ஏராளமான மக்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் டயர் 4 ஊரடங்கு அந்தப்பகுதியில் அமலில் இருந்துள்ளது. இதன்படி, திருமண நிகழ்ச்சியில் அதிகபட்சம் 6 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இந்நிலையில், அதிக நபர்களை திரட்டி திருமணம் நடத்தியதால் கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக அவர்களுக்கு 10000 பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் தடுப்பு அமைத்து ஒவ்வொரு காரின் வாகன பதிவு எண்ணையும் குறித்து விட்டு வெளியேற்றியுள்ளனர்.மேலும் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரமாகி வரும் நிலையில் எங்காவது இதுபோன்ற வழக்குகளும் நடக்கின்றன. இது போன்று மக்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் இறுதி முயற்சியாக அமலாக்க நடவடிக்கையை எடுப்போம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |