மும்பையில் தகிசார் பகுதியில் அமைந்துள்ள பார் ஒன்றில் போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பாரில் ரகசிய அறை ஒன்றை இருப்பதை கண்டறிந்து அதில் ஆய்வு நடத்திய போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த அறையில் 17 பெண்களை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயத்தை போலீசார் கண்டறிந்தனர். அந்த ரகசிய அரங்கில் முதலில் நான்கு பெண்கள் இருப்பதை கண்டறிந்த போலீசார் ஆய்வு செய்தபோது 17 பெண்கள் அங்கு பதுங்கியுள்ளது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக உணவகத்தின் மேலாளர் உள்ளிட்ட ஆறு ஊழியர்களும் 19 வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.