பள்ளியில் பொருத்தப்பட்ட கேமராவில் ஆசிரியரின் செயல் பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
தாய்லாந்தில் ஆசிரியை ஒருவர் நர்சரி பள்ளியில் குழந்தைகளை மிகவும் கடுமையாக நடத்துவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள பள்ளியில் சில இடங்களிலும் வகுப்பிலும் சிசிடிவி கேமராக்கள் ஆசிரியைக்கு தெரியாமல் பொருத்தப்பட்டது. அதன்பிறகு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த பெற்றோருக்கு கோபம் அதிகரித்தது.
அந்த காணொளியில் Ornuma என்ற ஆசிரியை சிறிய குழந்தைகளை கடுமையாக அடிப்பது, அவர்களது காதை முறுக்குவது, கழிவறையில் அடைத்து வைப்பது, மேலும் அவர்களின் தலையை டெஸ்டில் மோத வைப்பது என பல கொடுமையான காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து ஆசிரியர் பெற்றோர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் வந்த பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் குழந்தைகளை கடுமையாகத் தாக்கிய ஆசிரியை அடி பின்னி விட்டனர். குழந்தையின் தாய் அழுது கொண்டே பளார் பளார் என்று அந்த ஆசிரியையை அறைய குழந்தையின் தந்தையும் சேர்ந்து அடித்துத் துவைத்து விட்டார். அதோடு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் மூலம் Ornuma காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
காவல்துறையினர் அவர் மீது சட்டவிரோதமாக குழந்தைகளை அடைத்து வைத்தது மற்றும் கடுமையாக தாக்கியது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்தனர். அந்த ஆசிரியை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதனிடையே Ornuma ஆசிரியர் பணியில் இருப்பதற்கான உரிமம் இல்லாமல் பள்ளியில் பணிபுரிந்தது தெரியவந்தது. இதுதொடர்பான குற்றச்சாட்டும் அவர்மீது போடப்பட்டுள்ளது ஆனால் அந்த ஆசிரியை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக, காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.