நடிகர் ராஜ் கிரண் மகள் ஜீனத் பிரியாவை, நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் ஒருசில படங்களிலும் நடித்து பிரபலமாகிய முனீஸ் ராஜா காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக கோபமடைந்த ராஜ் கிரண், பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல. இனி இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தன் கணவர் மீது அவதூறு பரப்புவதாக வளப்பு மகள் ஜீனத் பிரியா மீது ராஜ்கிரண் மனைவி பத்மஜோதி (எ) கதீஜா புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து முசிறி டி.எஸ்.பி முன்னிலையில் ஜீனத் பிரியா அவரது கணவர் முனீஸ் ராஜா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.