குடித்துவிட்டு கடை உரிமையாளரை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதிகள் சுகர்னோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமதுரியாஸ் மற்றும் காஜாமைதீன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் குடித்துவிட்டு பகுர்தீன் என்பவருடைய கடைக்கு சென்று அங்குள்ள பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பகுர்தீன் சகோதரர்களை தட்டி கேட்டபோது அவர்கள் கற்களால் பகுர்தீனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த பகுர்தீனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பகுர்தீன் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முகமதுரியாஸ் மற்றும் கஜாமைதீன் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.