Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரகளை செய்த கும்பல்…. ரயில்வே ஊழியருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

சில நாட்களுக்கு முன்பு ரயிலில் ஏறி ரகளை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி, பழனி வழியாக சென்று கொண்டிருந்தது. தத்தனேரி வருகை பாலத்தில்  சென்றுகொண்டிருந்த போது சிக்னல் சரியாக இல்லாததால் பேருந்து  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது சில மர்மநபர்கள்  ரயிலில் ஏறி கத்தி கூச்சலிட்டு உள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட  ரயில்வே ஊழியரையும் அந்த கும்பலை  சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு அவரிடமிருந்து 1  பவுன் தங்க மோதிரம்  மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து  தப்பி சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் சிக்னலை வைத்து அர்சத், ஆசாருதீன், கார்த்திகேயன், ஷாருக் கான் ஆகிய  வாலிபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |