சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிச்சநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சித்துராஜபுரத்தில் வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் கையில் அரிவாளுடன் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் ஜான் பீட்டரை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினார். இதில் கோபமடைந்த ஜான் பீட்டர் சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜான்பீட்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.