நடிகை ராகுல் பிரீத் சிங் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் ‘என்னமோ ஏதோ’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிகர் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . மேலும் நடிகர் சூர்யாவுடன் ‘என் ஜி கே’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்ட்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது தலைமுடி அங்கும் இங்குமாக நீட்டிக் கொண்டிருப்பதால் ‘இது என்ன கொரோனா ஹேர் ஸ்டைலா ?’ என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்துள்ளனர் . இன்னும் சிலர் கொரோனா வந்ததால் உடல் மெலிந்து விட்டதா? என அக்கறையுடன் கமெண்ட்ஸ் செய்துள்ளனர் . இதையடுத்து இந்த புகைப்படத்திற்கு நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட சில தெலுங்கு பிரபலங்கள் லைக்ஸ் போட்டுள்ளனர்.