Categories
தேசிய செய்திகள்

ரக்ஷா பந்தன் ஸ்பெஷல்…. நாளை முழுவதும் பெண்களுக்கு இலவசம்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

ரக்ஷா பந்தன் அன்று அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் இலவசமாக சென்று வரலாம் என உத்திரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாளை ரக்ஷாபந்தன் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அண்ணன்களுக்கு தங்கை மற்றும் தம்பிகளுக்கு அக்கா கையில் ராக்கி கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தும் நாளான அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது ரக்ஷபந்தன் திருநாளை முன்னிட்டு சகோதரத்துவத்தை போற்றும் விதமாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணம் மேற்கொள்ளலாம் அதோடு அனைத்து பேருந்துகளிலும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணிவரை கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது

Categories

Tech |