Categories
தேசிய செய்திகள்

ரக்‌ஷா பந்தன்….. கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் என்ன?….. வாங்க தெரிஞ்சுக்கலாம்….!!!

நாளை நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகின்றது.  இது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை. ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதம் பௌர்ணமி திதியிலேயே கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தில் சகோதரிகள் தான் சகோதரன் என கருதுவோருக்கு அவரின் மணிக்கட்டில் ராக்கி என்னும் ஒரு மஞ்சள் நூல் கட்டுவது.

இந்த பண்டிகையின் சிறப்பான நிகழ்வு அந்த பெண்ணை சகோதரியாக ஏற்றுக்கொண்டு, அந்த சகோதரன் அவரின் பாதுகாப்பிற்கும், அவரின் வாழ்வில் மகிழ்ச்சிக்காக உறுதுணையாக நிற்பேன் என்று உறுதி ஏற்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பெரும்பாலும் இந்து மக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தாலும், இது இனம், மதம் மொழியைத் தாண்டி அனைத்து சமூகத்தில் உள்ள மக்களும் இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். வட இந்தியாவில் பிரபலமான ரக்‌ஷா பந்தன் தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகின்றது.

Categories

Tech |