Categories
சினிமா தமிழ் சினிமா

“ரங்கோலி” படத்தின் புதிய அப்டேட்…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு….!!!

ரங்கோலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் ஹமரேஷ் ரங்கோலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரார்த்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தை வாலி மோகன் தாஸ் இயக்க, கோபுரம் ஸ்டூடியோஸ் சார்பில் ஜி. சதீஷ்குமார் மற்றும் கே. பாபு ரெட்டி தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ள ரங்கோலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு கூறியுள்ளது. மேலும் படக்குழுவினர் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Categories

Tech |