Categories
தேசிய செய்திகள்

ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ… 2 தொழிலாளர்கள் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 2 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேகு தொழிற்பேட்டையில் இருக்கின்ற ஒரு ரசாயண தொழிற்சாலையில் நேற்று இரவு நேர வேலையில் தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் பாய்லர் வெடித்தது போன்ற மிகப் பெரிய சத்தம் கேட்டுள்ளது. சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பிடித்து எரிந்தது.

அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்தக் கொடூர விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |