Categories
தேசிய செய்திகள்

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து….18 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் எஸ்விஎஸ் அக்வா டெக்னாலஜிஸ் என்ற ரசாயன தொழிற்சாலை ஒன்று இன்று திடீரென பெரிய அளவில் தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தொழிற்சாலை முழுவதும் கரும்புகை பரவியது. இந்த தீ விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்நிறுவனத்தில் 37 பேர் பணியில் இருந்துள்ளனர். இதுவரை 20 பேரை மீட்டுள்ளனர். அந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். 10 பேரை காணவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. மீட்புப் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 15 பேர் பெண்கள். இந்த ஆலையில் தண்ணீரை சுத்தப்படுத்தும் குளோரின் டை ஆக்சைடு மாத்திரை தயாரிக்கப்பட்டு வந்தது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |