Manchester United அணி சாம்பியன் லீக் தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானதால் ரொனால்டோ விரக்தியில் உள்ளார்.
எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தோல்வியடைந்தார். இந்நிலையில் Manchester United அணி சாம்பியன் லீக் தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானது. இதனால் ரொனால்டோ மைதானத்தை விட்டு விரக்தியில் வெளியேறினார். அந்த சமயத்தில் அவரது ரசிகர் ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற போது அவரது கையை ரொனால்டோ தட்டிவிட்டுள்ளார். இதனால் செல்போன் கீழே விழுந்து உடைந்தது.
இதனை அடுத்து ரொனால்டோ தனது கோபத்திற்கு மன்னிப்பு கேட்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் Manchester United அணி விளையாடும் விளையாட்டை காண அந்த ரசிகருக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார்.