Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரசிகர்களால் பிரச்சனையில் சிக்கிய அஜித்… பால் முகவர் சங்கம் கோரிக்கையுடன் கண்டனம்… எதற்காக தெரியுமா…?

நடிகர் அஜித்துக்கு பால் முகவர் சங்கம் கோரிக்கை மற்றும் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24 நாளில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றார்கள். இத்திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருக்கிறார். போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படமானது பிப்ரவரி 24 அதிகாலை 4 மணியளவில் ரிலீசானது. அப்போது ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக அவ்வழியில் சென்று கொண்டிருந்த பால் வண்டியை மடக்கி அதிலிருந்த தயிரை பால் என நினைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பால் முகவர் சங்கத் தலைவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். வீடியோ பதிவில் அஜித்துக்கு கண்டனத்தையும் கோரிக்கையும் விடுத்துள்ளார். உங்களின் சென்ற திரைப்படமான விவேகம் ரிலீசான போது ரசிகர்கள் செய்த செயலுக்காக உங்களை சந்திக்க முயற்சி செய்து இருந்தோம். ஆனால் உங்கள் மேனேஜர் சுரேஷ் அஜித்துக்கு என ரசிகர் மன்றம் இல்லை. அவர் அதைக் கலைத்து விட்டார். இதனால் எந்த அறிக்கையையும் அவர் வெளியிட மாட்டார் என கூறினார் மேனேஜர் சுரேஷ். நீங்கள் ரசிகர் மன்றத்தை கலைத்து இருந்தாலும் உலகம் முழுவதும் உங்களுக்கு ரசிகர் கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. பால் அபிஷேகமும் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நான் மன்றத்தை கலைத்து விட்டேன் என்று கூறினாலும் ரசிகர்களின் செயல்களை கட்டுப்படுத்துவது உங்களின் தலையாய கடமையாகும். ஆதலால் நீங்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு இதற்கு நல்ல முடிவை காண வேண்டும் என வீடியோ பதிவில் கூறியிருக்கின்றார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |