தொலைக்காட்சியில் ராமானந்த் சாகரின் இயக்கத்தில் உருவான இதிகாச தொடர் ராமாயணம் அதிக வரவேற்பை பெற்றது. இதில் வில்லன் ராவணனாக அரவிந்த் திரிவேதி என்பவர் நடித்தார். இவர் ராமாயணம் தொடரில் ராவணன் கதாபாத்திரத்தில் தன் நடிப்பால் அதிக ரசிகர்களின் மனதை கவர்ந்து ரீல் ராவணனாக இருந்து வந்தார். மேலும் இவர் இந்தி மற்றும் குஜராத் மொழியில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்து விருதுகளையும் பெற்றுள்ளார்.
திரைப்படத்துறையில் 40 ஆண்டுகாலமாக தனது பயணத்தை மேற்கொண்ட இவர் 1991 ஆம் ஆண்டு பாரத ஜனதா கட்சியின் எம்.பி.யாகவும் இருந்தார். இதனிடையே சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மரணமடைந்ததாக பலமுறை பல வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இவர் தற்போது உண்மையாகவே மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.