தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இளைஞர்களால் செல்லமாக இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவரது திரைப்படங்கள் வரும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம். தமிழில் இவரது நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையின் நடிகர் விஜய் instagram கணக்கை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை twitter கணக்கை மட்டும் வைத்துக்கொண்டு தனது படங்களின் போஸ்டர்களை மட்டும் வெளியிட்டு வந்த விஜய் இனி இன்ஸ்டாகிராமில் குடும்ப புகைப்படங்கள், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் உள்ளிடவற்றை பதிவிட உள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்து தனது ரசிகர்களிடம் உரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.