Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ‘மாநாடு’ படக்குழு…. வைரலாகும் வீடியோ….!!!

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மாநாடு படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல தடைகளைத் தாண்டி வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படம் அடாது மழையிலும் இரண்டே நாட்களில் ரூ.14 கோடியும், மூன்று நாட்களில் ரூ.22 கோடியும் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மாநாடு படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிம்பு, வெங்கட் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் நன்றி தெரிவிக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |