தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் பிஸியாக இருக்கும் விஜய் அரசியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்துவிட்டார்.இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பொதுச்செயலாளர் பிஸ்சி ஆனந்த், ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். பிறகு தொழில், அதன் பிறகு தான் சேவைக்கு வர வேண்டும்.வருமானத்தில் ஒரு பகுதியை மட்டும் சேவைக்கு செலவிட வேண்டும் என்று ரசிகர்கள் யாரிடமும் கடன் வாங்க கூடாது என்றும் விஜய் உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.