Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்திய அஜித்… வைரலாகும் பழைய வீடியோ…!!!

நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்திய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது . ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் வலிமை படத்தின் அதிரடியான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது நடிகர் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும் அவ்வப்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ள பழைய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Categories

Tech |