சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், சூரி, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
#ETupdate Tomorrow @ 12 PM!
Kaathiruppom 😎@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj #SaranyaPonvannan #MSBhaskar @immancomposer @RathnaveluDop @priyankaamohan @sooriofficial @VijaytvpugazhO #Ramar #EtharkkumThunindhavan pic.twitter.com/hyLeZblzt5— Sun Pictures (@sunpictures) November 18, 2021
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட் நாளை மதியம் 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .