Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே ரெடியா?… சிம்புவின் 48-வது படம்… வெளியான மரண மாஸ் அப்டேட்…!!!

நடிகர் சிம்புவின் 48-வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் வருகிற தீபாவளி அன்று தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு இணைந்து நடித்துள்ள ‘மஹா’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது . தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார் .

இதைத்தொடர்ந்து இவர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் நடிகர் சிம்புவின் 48-வது படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

Categories

Tech |