Categories
கால் பந்து விளையாட்டு

ரசிகர்கள் அதிர்ச்சி…. மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரொனால்டோ நீக்கம்..!!

கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டது.

உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தெரியாதவர்கள் யாரும் கிடையாது. போர்ச்சுகலை சேர்ந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு கிளப் போட்டிகளில் முதல் முறையாக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார். அதன்பின் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ, தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு,  3 ஆண்டுகளாக அந்த அணிக்காக ஆடிவந்தார். இதையடுத்து கடந்தாண்டு தான் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார் ரொனால்டோ.

இந்த சூழலில் தற்போது ரொனால்டோவுக்கும், தனது அணியின் பயிற்சியாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ரொனால்டோ தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியில் தனக்கு நேர்ந்த துரோகம் குறித்தும், ரூனி குறித்தும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

இது தொடர்பாக ரொனால்டோ அளித்த பேட்டியில், தன்னை ஏன் அவர் மிகவும் மோசமாக விமர்சனம் செய்கிறார் என்று தெரியவில்லை. தனக்கு மேலாளர் எரிக் தகுந்த மரியாதையை கொடுக்கவில்லை. எனவே நானும் அவருக்கு உரிய மரியாதை கொடுக்க விரும்பவில்லை. நான் இந்த அணியில் இருப்பது பலருக்கும் பிடிக்கவில்லை” என்று தனது மன வருத்தத்தை வெளிப்படையாக கூறியிருந்தார்.

இப்போட்டிக்கு பின் ரொனால்டோவை உடனே மான்செஸ்டர் யுனைடெட்  அணி கிளப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அணியின் மேலாளர் டெடி ஷெரிங் ஹாம் தெரிவித்திருந்தார். அதன்படி கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறினார்.. மான்செஸ்டர் யுனைடெட்  அணி கிளப் செவ்வாயன்று (நேற்று) ஒரு அறிக்கை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு உடனடியாக வெளியேறுகிறார். ஓல்ட் ட்ராஃபோர்டில் இரண்டு ஸ்பெல்களில் அவரது மகத்தான பங்களிப்பிற்காக கிளப் அவருக்கு நன்றி தெரிவிப்பதாக மான்செஸ்டர் யுனைடெட்  அணி கிளப் தெரிவித்துள்ளது..

ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 தோற்றங்களில் 145 கோல்களை அடித்த அவரது மகத்தான பங்களிப்பிற்காக கிளப் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது, மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிர்காலம் குறித்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ரொனால்டோ நீக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |