Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் ஆசைப்படும் பரிசு… நான் இப்போ சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கிறேன்…? சத்தியராஜ் செய்த செயல்…!!!!!!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷ்கா நடித்திருக்கின்றார். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார். மேலும் இந்த படத்தில் சத்தியராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதனை அடுத்து இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் நடிகர் சத்யராஜ்  சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஆசைப்படும் பரிசை அவர்கள் சார்பாக நான் சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கிறேன் என தெரிவித்து முத்தம் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் பணம் காசு இதெல்லாம் பெரிது இல்லை நீங்கள் கோடிக்கணக்கில் சிவகார்த்திகேயனுக்கு பரிசு கொடுத்தாலும் அவருக்கு சந்தோஷம் இருக்காது. ஆனால் நீங்கள் அன்பாக கொடுக்கும் ஒரு முத்தம் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |