Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த… ‘குக் வித் கோமாளி-2 கொண்டாட்டம்’… கலக்கலான புரோமோ வீடியோ இதோ…!!!

‘குக் வித் கோமாளி சீசன்-2 கொண்டாட்டம்’ நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் ‌. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடைபெற்றது. இதில் சகிலா, பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, பவித்ரா, தர்ஷா குப்தா, மதுரை முத்து, தீபா ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். மேலும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சரத், சுனிதா, சக்தி உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து அசத்தினர்.

இந்த சீசன் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘குக் வித் கோமாளி சீசன்- 2 கொண்டாட்டம்’ நிகழ்ச்சியின் கலகலப்பான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |