கிரீஸ் நாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் உள்ளூர் கால்பந்து கிளப் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . இந்த நிலையில் கிரீஸ் அரசு இதுபோன்ற விளையாட்டுப் போட்டி தொடர்பான மோதல்களை தடுக்க கடுமையான விதிகள் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இதுவரை 9 பேர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் விரைவில் விளையாட்டு துறையை சீர்திருத்தும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.