மலையான நடிகையான அனுபமா பரமேசுவரனின் பிரேமம் மெகா ஹிட் அடித்தது. அந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.பிரேமம் திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். பார்ப்பதற்கு மெழுகு சிலை போல அழகாக இருக்கும் அனுபமா, தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மலையாள படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்த அனுபமாவிற்கு தமிழில் பெரிதாக படங்கள் எதுவும் இல்லை.
மேலும் தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நடிகை அனுபமா அண்மையில் ஹர்ஷா கோனுகாண்டி இயக்கத்தில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து நடித்தரௌடி பாய்ஸ் என்ற படத்தில் மருத்துவக்கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இந்த படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது.அதிலும் குறிப்பாக அந்த படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் மிகவும் நெருக்கமாக லிப்லாக் காட்சியில் நடித்தது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாது.
இந்நிலையில் பிஸியான நடிகையாக மாறி உள்ள அனுபமா, தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அனுபமா வரும் தகவல் வெளியானதை தொடர்ந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து விட்டனர். இதனால் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கடை திறப்பு விழாவை முடித்துவிட்டு அனுபமா வெளியேவந்த போது அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தனர். கூட்டம் ரொம்ப அதிகமாக இருந்ததால், அனுபமா செல்ஃபி எடுக்க மறுத்துவிட்டு காரில் ஏறியுள்ளார்.