சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் யாஷிகாவிடம் கேட்ட கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இதில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் . தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசனில் கலந்து கொண்டுள்ள பாலாஜி யாசிகாவின் நண்பர் என வலைத்தளங்களில் தகவல்கள் கசித்தது . பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே யாஷிகாவும் பாலாஜியும் விஜய் டிவியில் கனெக்சன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் யாஷிகாவிடம் சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘பிக்பாஸ் பாலாஜிக்கும் உங்களுக்கும் என்ன உறவு ?’என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மனம் திறந்து பதிலளித்த யாஷிகா, ‘முன்பு பாலாவுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது . இந்த சீசனில் பாலாவுக்கு கிடைத்துள்ள புகழ் எனக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்துள்ளது . அவர் ரொம்ப நாளாக இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தார்’ என பதிலளித்துள்ளார் .