சந்தோஷ் நாராயணன் இசையில் நானி நடிக்கும் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நானி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சிங்காராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது நானி புதிய திரைப்படம் ஒன்றில் நடித்த வருகின்றார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் சில்க் ஸ்மிதாவின் புகைப்படம் இருந்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இத்திரைப்படத்திற்கு தசரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கும் இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனது கனவு நனவாவதற்கு நன்றி. நடிகர் நானி இந்த பாடலை பகிர்ந்து ஆண்கள் மற்றும் பெண்களே, நடனமாடுபவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள், பாடகர்கள் மற்றும் ரசிகர்களே இதோ கிளாஸான மாஸான தாம் தூம் தோஸ்தான் பாடல் இதோ என பதிவிட்டு இருக்கின்றார்.