Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! ரஜினிகாந்த்தால் பிரபல நடிகருக்கு அடித்த ஜாக்பாட்.‌‌… முடிவை மாற்றிய ஐஸ்வர்யா….!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க போவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அந்த படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்பது அதன் பின்பு தான் தெரிய வந்திருக்கிறது. இந்த சூழலில் ரஜினி மகள் ஐஸ்வர்யா எழுதியிருக்கும் இந்த கதையில் அதர்வா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்காமல் போனதால் அதர்வா இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் விரைவில் இந்த படத்தைப் பற்றிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |