சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் பற்றிய புது தகவல் வெளியாகியுள்ளது.
“அண்ணாத்த” திரைப்படத்திற்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 169-வது படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்த திரைப்படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சென்ற சில மாதங்களுக்கு முன் வெளியாகியது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தின் கதை எழுதும் பணிகளானது நிறைவுபெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து திரைக்கதை எழுதும் பணியை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கவனித்து வருகிறார். இப்பணிகள் வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் நிறைபெறும் எனவும் அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் தொடங்கும் எனவும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் படத்திற்கு “ஜெயிலர்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புறப்படுகிறது. இப்படம் ஜெயிலில் நடைபெறும் சம்பவங்களை வைத்து உருவாகியுள்ள கதை களமாக இருக்கும் என கூறப்படுகிறது.