Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்காக தேர்தலில் களமிறங்கும்… பிரபல தமிழ் நடிகர்… முக்கிய தகவல்…!!!

நடிகர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் களத்தில் நடிகர் பிரசாந்த் தமிழகம் முழுக்க பிரசாரம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அவரால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் அடுத்த மாதம் ரஜினி அரசியல் கட்சியை அறிவிக்க உள்ளார்.

அதனால் ரஜினிக்காக தேர்தல் களத்தில் நடிகர் பிரசாந்த் தமிழகம் முழுக்க பிரசாரம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாக பரவி வருகிறது. இதுபற்றி நடிகர் பிரசாந்த் கூறுகையில், “என்னைப் பற்றி ஒரு தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அந்தச் செய்தி உண்மையல்ல. அதனை யாரும் நம்ப வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |