Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிக்காக பின்வாங்கும் விஜய்… சன் பிக்சர்ஸின் திட்டம்… எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்…!

விஜய்யின் 65 ஆவது படம் ரஜினியின் அண்ணாத்த படத்தால் தள்ளிப் போடப்படுகிறது.

நடிகர் விஜய் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்.மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் விஜய் நடிப்பில் உருவாகிய மாஸ்டர் திரைபடத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜனவரி 13 ஆம் ஆண்டு வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வரிசையில் விஜய் 65 பட வாய்ப்பை விஜய் இளம் இயக்குனருக்கே கொடுக்க இருக்கிறார். அதனடிப்படையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜயின் 65வது படம் உருவாக்கப்பட உள்ளது. விஜயின் 65வது படத்தை இந்த வருடம் தீபாவளிக்கு வெளியிடப்படலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படமும் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்பதை உறுதி செய்துள்ளது. இந்த இரண்டு படங்களையுமே சன் பிக்சர்ஸ் தயாரித்து வருவதால் ஒரே நாளில் இரண்டு படங்களையும் வெளியிடுவது சாத்தியமற்றது. ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் இன்னும் 40 சதவீத படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருக்கிறது. படக்குழுவினர் ரஜினியுடன் கலந்து பேசி படப்பிடிப்பை கூடிய விரைவில் தொடங்க உள்ளதால் ரஜினிக்காக விஜய் படம் தள்ளிப்போகிறது.

பிரபல ஹீரோக்களின் படங்கள் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை கைகளிலேயே வெளியாகும். எனவே இந்த தீபாவளிக்கு மற்ற ஹீரோக்களின் படங்கள் வெளியாவது அறிவிப்புக்கு முன்பே சன் பிக்சர்ஸ் அண்ணாத்த படத்தை வெளியிடப்போவதாக அட்வான்ஸ் புக்கிங் செய்வது போல அறிவித்துள்ளது.ஆகையால் இந்த ஆண்டைப் போலவே விஜயின் 65வது படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |