ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிராக ட்விட்டரில் போட்டா போட்டி நிலவி கொண்டிருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிராக, ‘#தமிழர்_ நாட்டை_ தமிழர்_ ஆள்வோம்’ என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. இதனை சீமான் ஆதரவாளர்கள் ட்விட்டரில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கு எதிராக #இப்போ_ இல்லேன்னா_ எப்பவும்_ இல்ல என்ற வாசகத்தை ரஜினி ரசிகர்களும் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகிறார்கள். அதனால் ட்விட்டரில் போட்டா போட்டி நிலவி வருகிறது.