தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியலுக்கு வருவேன், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தொடர்ந்து பேசி வந்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வாழ்க்கையை உறுதி செய்துள்ளார். வருகின்ற 31ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு என்றும், ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் கட்சியை ஒருங்கிணைக்க நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.
இந்த நிலையில் ரஜினி யாருடன் கூட்டணி வைப்பார் ? தேர்தலை எப்படி சந்திப்பார் ? என்ற பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது, ரஜினிக்கு சுய சிந்தனை உள்ளது. அதனால் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். தேர்தல் கூட்டணி வேறு, அரசு நிலைப்பாடு வேறு என்பதில் முதல்வர் தெளிவாக உள்ளார் என தெரிவித்தார்.