ரஜினி முருகன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ரஜினி முருகன். இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்த இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . முதலில் இந்த படம் குறித்த தேதியில் ரிலீசாகவில்லை. இதற்கு காரணம் இந்த படத்தை தயாரித்த இயக்குனர் லிங்குசாமி சில கடன் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறி வந்தார்.
இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் இந்த படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் நடிகர் ஆர்யா தான். இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் பொன்ராம் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி முருகன் படத்தின் கதையை ஆர்யாவிடம் கூறியதாகவும் ஆனால் கதையில் பெரிதாக ஒன்றும் இல்லை என கூறி அந்தப் படத்தை ஆர்யா நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.