“ரஜினி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கும் திரைப்படம் ரஜினி. இத்திரைப்படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை ஷெரின் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது ஆக்சன், கமர்சியல், குடும்ப திரைப்படம் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் படக்குழுவினர் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பேசும்பொழுது இத்திரைப்படத்தின் பெயராலே இப்படம் வெற்றி அடைந்து விடும் என கூறினர். இவர்களை தொடர்ந்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார்.
அவர் பேசியதாவது, திரைப்படத்திற்கு ரஜினி என்று பெயர் வைத்தால் படம் வெற்றி அடைந்து விடாது. சினிமாவில் கொரோனா காலகட்டத்திலும் மாவீரன் மற்றும் தயாரிப்பாளர் பழனிவேல் உள்ளிட்டோர் இரண்டு படங்களை எடுக்கிறார்கள். மேலும் இயக்குனர் வெங்கடேஷ் மக்கள் விருப்பத்திற்கேற்ப கமர்ஷியல் படங்களை கொடுப்பவர். இருவரும் சேர்ந்து நல்ல படத்தை தருவார்கள். ரஜினி என்று பெயர் வைத்தால் படம் வெற்றியடையும் என கூறுகிறார்கள். எந்த படமும் பெயரினால் வெற்றியடையாது. நல்ல கதை இல்லை என்றால் எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் படம் வெற்றி அடையாது. திரைப்படத்திற்கு மிக முக்கியமானது கதையே. இயக்குனர் வெங்கடேஷ் கண்டிப்பாக நல்ல கதையை வைத்து இருப்பார். படத்தின் ஹீரோவிடமும் நல்ல நடிப்பு திறமை உள்ளது. தயாரிப்பாளர்களை மறக்காமல் இருந்தால் தான் நீங்கள் வளர்வீர்கள். நல்ல கதை இல்லாமல் அண்மையில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படங்கள் கூட தோல்வியடைந்தது. இயக்குனர் வெங்கடேஷ் நிச்சயமாக நல்ல கதையை வைத்திருப்பார். ஆகையால் இத்திரைப்படம் வெற்றியடையும் என வாழ்த்துக்களை கூறி தன் உரையை முடித்தார்.