நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது .
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த . இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா ,நயன்தாரா ,கீர்த்தி சுரேஷ், சூரி ,சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . மேலும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்றது .
.@IamJagguBhai joins the cast of #Annaatthe.@rajinikanth @directorsiva @immancomposer #Nayanthara @KeerthyOfficial pic.twitter.com/k9ZHVLUNNx
— Sun Pictures (@sunpictures) March 16, 2021
ஒரு வாரத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படக்குழுவில் இருந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த மாதம் மீண்டும் சென்னையில் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஜகபதி பாபு இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.