நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துள்ள நிலையில் அவரின் பஞ்ச் டயலாக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினியை விமர்சித்து ரஜினியின் அரசியல் பஞ்ச் டயலாக் கொடுக்கப்பட்டுள்ளது.
அன்று- மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம்.
இன்று- ஏற்பட்ட உடல்நலக்குறைவு ஆண்டவன் கொடுத்த எச்சரிக்கையாக பார்க்கிறேன்.
அன்று- மாத்துவோம் எல்லாத்தையும் மாற்றுவோம்.
இன்று- என்னை நம்பி என்னுடன் வருபவர்களை பலிகடாவாக்க விரும்பவில்லை.
அன்று- இப்போ இல்ல நான் எப்பவும் இல்லை.
இன்று- அரசியலுக்கு வரவில்லை என்று அறிவிக்கும் போது ஏற்பட்டுள்ள வலி எனக்கு மட்டுமே தெரியும்.
அன்று- தமிழக மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன்.
இன்று- தேர்தல் அரசியலுக்கு வராமல் என்னால் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்.