Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரஜினியின் இடத்தை பிடித்த விஜய்… பேட்டியில் பகிர்ந்த கே.ராஜன்…!!!

நடிகர் விஜய் ரஜினியின் இடத்தை பிடித்துள்ளார் என கே.ராஜன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். இத்திரைப்படமானது ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்வதாக படக்குழு முடிவெடுத்துள்ளது. விஜய், பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு அடுத்த படத்தில் வம்சி பைடிபல்லியுடன் இணைய உள்ளார்.

விஜய் தற்போது பாக்ஸ் ஆபீஸில் கிங்காக வலம் வருகின்றார். கொரோனா தாக்கத்திற்கு பிறகு வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வசூலை தந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, ரஜினியை நடிகர் விஜய் பின்னுக்கு தள்ளி விட்டதாக கூறி இருக்கின்றார். அப்போது சிவாஜி, பிறகு ரஜினி, தற்போது விஜய் அந்த இடத்தை பிடித்துள்ளதாக கூறியிருக்கின்றார்.

Categories

Tech |