Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் கதாபாத்திரம் குறித்து பிரபல நடிகரின் டுவீட்… எதிர்பார்ப்பை எகிற விடும் ‘அண்ணாத்த’…!!!

அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் குறித்து பிரபல நடிகர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அண்ணாத்த படபிடிப்பு தளத்தில் இயக்குனர் சிவாவுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டிருந்தது.

https://twitter.com/GeorgeMaryanOff/status/1382683287060049932

இந்நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து நடிகர் ஜார்ஜ் மரியன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐயாவின் நகைச்சுவை உங்கள் அனைவரையும் அவரது பொன்னான நாட்கள் படங்களுக்கு செல்ல செய்யும்’ என குறிப்பிட்டுள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Categories

Tech |