ரஜினியின் 169 திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் நெல்சன் திலீப்குமார் தற்போது பீஸ்ட் திரைப்படத்தை முடித்துள்ள நிலையில் ரஜினியின் 169-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் ரஜினி அடுத்த திரைப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமாரை தேர்ந்தெடுத்துள்ளார்.
இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார். நெல்சன் அடுத்தடுத்த வெற்றித் திரைப்படங்களை தந்து உள்ளதால் இத்திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது. பீஸ்ட் படம் அடுத்த வாரம் ரிலீஸாக உள்ள நிலையில் தலைவர்-169 படத்தின் படப்பிடிப்பிற்கு களம் இறங்கியுள்ளார் நெல்சன்.