Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியின் முடிவை வெறுத்த நிர்வாகிகள்… இந்த கட்சியில் இணைந்தார்களா…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ரஜினி மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ள தகவல் திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அன்று தன் ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 31 ஆம் தேதியில் கட்சி அறிவிப்பு வெளியாகும் என்றும் ஜனவரி மாதத்தில் கட்சி துவங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து டிசம்பர் 29 ஆம் தேதி அன்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் கடும் வேதனை அடைந்தனர்.

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலை காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தன்னை நம்பி வருபவர்களையும் பலியாக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அதன் பின்பு கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று ரஜினி அவரின் அரசியல் தொடர்பாக எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்யகோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி மன்ற நிர்வாகிகள் பலர் போராட்டம் நடத்தினர்.ஆனால் ரஜினி கடந்த ஜனவரி 11ஆம் தேதியன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், “ஏற்கனவே என் முடிவை நான் அறிவித்துவிட்டேன்.

அதன் பின்பும் இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு மேலும் என்னை வேதனையடைய செய்யாதீர்கள் என்று கூறிவிட்டார். இதனைத்தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு எவருக்கும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த மகளிர் அணியினர் சுமார் 45 க்கும் மேற்பட்டோர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில், முக ஸ்டாலின் முன்னிலையில் இணைத்திருப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது.

Categories

Tech |