ரஜினியின் 169-வது திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு இரண்டு முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் தற்போது 169-வது திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார்.
அண்மையில் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். இதை தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஐஸ்வர்யாராயுடனும் தீபிகா படுகோனுடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.